குழந்தைகள் கண் முன்னே நீரில் அடித்து செல்லப்பட்ட இறந்த தந்தை

கிரைம்

Update: 2025-01-14 12:09 GMT
தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்த செளந்தராஜன் (36),. இவரது மனைவி சரண்யா (33), இவர்களுக்கு நிதிஷா (12), நிவேதா (14),. என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் விழாவிற்காக திங்கள்கிழமை மாலை திருப்பூரில் இருந்து செளந்தராஜன் தனது குடும்பத்துடன் மேல உளூருக்கு வந்துள்ளார். வீட்டிற்கு செல்லும் வழியில் கல்லணை கால்வாயில் கிளை ஆறான கல்யாண ஓடையில் இறங்கிய குளித்துள்ளார். தனது தந்தை ஆற்றில் விளையாடிக்கொண்டு குளித்துப்பதை அவரது மகள்கள் வீடியோ எடுத்தப்படி கரையில் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது, செளந்தராஜன் நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அதன் பிறகு செளந்தராஜனின் மகள்கள் தந்தை நீரில் இருந்து வெளியே வரவில்லை என அழுதுள்ளனர். அதன்பிறகு மனைவியும் ஓடிவந்து பார்த்த போது, செளந்தராஜன் நீரில் அடித்து செல்லப்பட்டு இருப்பதை உணர்ந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செளந்தராஜனை தேடினர். பிறகு தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் திங்கள்கிழமை இரவு சுமார் 10:30 மணிக்கு செளந்தராஜன் உடலை மீட்டனர். இது குறித்து, ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செளந்தராஜன், நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த, அந்த கடைசி நிமிட காட்சிகளால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Similar News