ஆலங்குளத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது
மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அசுரா தன்னார்வ அமைப்பினா் சாா்பில் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் 350 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நல்லூா் விலக்கு முதல் சிவலாா்குளம் விலக்கு வரை சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் அசுரா நண்பா்கள் அறக்கட்டளை உறுப்பினா்கள், நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவா்கள், ஆலங்குளம் காமராஜா் தொழிற்பயிற்சி பள்ளி, ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா்கள் , ஆலடி மாணவா் பேரவை, குறிப்பன்குளம் இளந்தளிா் அமைப்பு மற்றும் ஆலங்குளம் பகுதி இயற்கை ஆா்வலா்கள் நட்டனா். இந்த அமைப்பினா் சாா்பில் கடந்த மாதம், 302 மரங்கள் நட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.