அனைத்து மதத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடிய தாந்தோணி மலை காவல்துறையினர்.

அனைத்து மதத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடிய தாந்தோணி மலை காவல்துறையினர்.

Update: 2025-01-14 12:52 GMT
அனைத்து மதத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடிய தாந்தோணி மலை காவல்துறையினர். தாந்தோணிமலை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மத வேறுபாடுகள் இன்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். காவல் நிலைய வாசலில் வண்ண கோலம் இட்டு செங்கரும்புடன் கூடிய சூரிய பொங்கல் இட்டு தீபா ஆராதனை செய்தனர் இந்த விழாவில் தேவாலய அருட்தந்தை கலந்து கொண்டு இறைவனை வேண்டியும், பள்ளிவாசலில் இருந்து வந்திருந்த ஜமாத்தை சேர்ந்தவர் துவா ஓதியும், காவலர்களுடன் இணைந்து தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் உதவி ஆய்வாளர்கள், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், தலைமை காவலர்கள் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் சமத்துவ பொங்கல் கொண்டாடும் வகையில் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்

Similar News