கொடையூர் அரசு உயர்நிலை பள்ளியில் முதலாம் ஆண்டு பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கொடையூர் அரசு உயர்நிலை பள்ளியில் முதலாம் ஆண்டு பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Update: 2025-01-14 13:06 GMT
கொடையூர் அரசு உயர்நிலை பள்ளியில் முதலாம் ஆண்டு பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கொடையூர் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் முதன்முதலாக நேற்று பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்ராஜ் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இப்பகுதியில் பள்ளி துவக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் பொங்கல் விழா கொண்டாடப்படவில்லை. நேற்றுதான் முதன்முதலாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டதால், பள்ளியில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்கள் மாணவ- மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி வளாகத்தில் சூரிய பொங்கல் இட்டு, பொங்கி வரும் வேலையில் "பொங்கலோ பொங்கல்" என அனைவரும் ஒன்று கூடி கூவி மகிழ்ந்தனர். தலைமை ஆசிரியர் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் மற்றும் மாணாக்கர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் வழங்கிய பொங்கலை சுவைத்து மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டான கபடி மற்றும் பல்வேறு நடன போட்டிகளும் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்ராஜ் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News