மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையேறும் வீராங்கனை
மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையேறும் வீராங்கனை;
இயற்கையை காத்திடவும், புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுன்ட் வின்சன் சிகரத்தில் ஏறுவதற்காக கடந்த டிசம்பர் -11ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முத்தமிழ்செல்வி கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி 6-வது மலையேற்றமான அண்டார்டிகா சிகரத்தின் 4,892 மீட்டர் (16,050 ) அடி உயரமுள்ள மலையின் உச்சியை 12வது நாளாக ஏறி அடைந்து முதல் தமிழ் பெண்ணாக முத்தமிழ் செல்வி சாதனை படைத்திருந்தார் . தமிழ்நாட்டில் இருந்து இதுவரை அண்டார்டிகா மவுண்ட் வில்சன் சிகரத்தை யாரும் தொடாத நிலையில் முத்தமிழ் செல்வி தற்போது தனது சாதனையை செய்து உள்ளார். அண்டார்டிகாவில் மிக உயரமான மவுண்ட் வின்சென்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெருமையை சாதனையை படைத்த முத்தமிழ் செல்விக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்த நிலையில், முதன் முதலாக ஆசிய கண்டத்தில் உள்ள எவரெஸ்ட் பனி மலையில் ஏறி உச்சத்தை தொட்டார்.அதனை தொடர்ந்து 4 கண்டங்களில் உள்ள மிக உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஆறாவது மலையாக அண்டார்டிகா கண்டத்தில் உள்ள மிக உயரமான பனி மலையான வின்சன் சிகரத்தின் உச்சத்தை தொட்டு சாதனையை படைத்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்நிலையில் அவர் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி பகுதியில் பொங்கல் கொண்டாடுவதற்காக வந்திருந்த அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பேட்டி:-முத்தமிழ் செல்வி. சாதனை புரிய உதவிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தார். ஆறு கண்டங்களில் உள்ள உயரமான ஆறு மலைகளில் ஏறிய பொழுது ஒவ்வொரு மலையிலும் புதுப்புது அனுபவம் கிடைத்ததாகவும், ஆறாவதாக ஏறிய அண்டார்டிகா மலையில் மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்ததாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆறு கண்டங்களில் உள்ள உயரமான மலைகளில் ஏறி இருப்பது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஏழாவதாக வட அமெரிக்காவில் உள்ள உயரமான மலையில் ஏறும் பயணத்தை வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த மலையில் ஏறி சாதனை படைத்தால் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் ஏழு கண்டங்களில் உள்ள உயர்ந்த மலைகளில் ஏறி சாதனை படைத்த பெண்ணாக இருப்பேன் எனவும் இந்தியாவிலேயே அதிவேகமாக ஏழு கண்டங்களில் உள்ள மலைகளை ஏறி சாதனை படைத்த பெண்ணாக இருப்பதாகவும் தெரிவித்தார் இயற்கை மாறிக்கொண்டு வருகிறது இதனால் பெரும் இயற்கை சீற்றங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.இயற்கை மாறி நம்மை அழிக்கும் முன்பே நாம் மாற வேண்டும் என்றார். என மலையேறி சாதனை படைத்த