பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்
பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்;
மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் கைவிடப்பட்டது குறித்து அண்ணாமலை போராட்டம் அறிவித்தது படித்த ஐபிஎஸ் அதிகாரி எதுவும் தெரியாதது போல இருப்பது அரசியலுக்காக செய்யும் நாடகம் போல் உள்ளது - அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளான பாளையம்பட்டி, கோபாலபுரம், ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, செம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு பின் கஞ்சநாயக்கன்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக அண்ணாமலை அருப்புக்கோட்டையில் 20 ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மோடி அரசின் தமிழ்நாட்டுக்கு எதிரான சிந்தனை வன்மையாக கண்டிக்கத்தக்கது. டங்ஸ்டன் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. அதற்கு போராட்டம் செய்வது அண்ணாமலை. மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை நடத்த வேண்டியது மத்திய அரசு. அதற்குப் போராட்டம் செய்வது அண்ணாமலை எனக்கு இது புரியவே இல்லை. இந்த ரயில்வே திட்டம் மத்திய அரசின் திட்டம் மன்மோகன் சிங் அரசு காலத்தில் துவங்கப்பட்டது. மாநில அரசு கேட்கும் 284 கோடி பணத்தை கொடுக்க வக்கில்லாத மத்திய அரசு திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது அந்த பழியை தமிழக அரசு மீது போட்டால் என்ன பதில் சொல்வது. அண்ணாமலையைப் பொருத்தவரை ஒரு படித்த ஐபிஎஸ் அதிகாரி எதுவுமே தெரியாதது போல இருப்பது அரசியலுக்காக செய்யும் நாடகம் போல் உள்ளது. மன்மோகன் சிங் அரசால் துவங்கப்பட்ட இந்த ரயில் திட்டத்தில் 20 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக 400 அதிகாரிகளை தமிழக அரசு சம்பளம் கொடுத்து வைத்திருந்தது. இதற்கு எப்படி தமிழ்நாடு அரசின் மீது பழியை போட முடியும். மத்திய அரசின் தவறுகளை மாநில அரசின் மீது போடுவது தவறாக இருக்கும். இதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் தேவைப்பட்டால் போராட்டமும் நடத்துவோம். மன்மோகன் சிங் இந்த திட்டத்தை கொண்டு வந்தார் மோடி இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார் என பேசினார். மதுரை தூத்துக்குடி ரயில்வே திட்டம் கைவிடப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வாய்மூடி மௌனியாக இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் குற்றம் சாட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, வைகை செல்வன் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவருக்கு அருப்புக்கோட்டை பிரச்சினையை பற்றி தெரியாது. இந்த பிரச்சனை குறித்து பலமுறை பேசியிருக்கிறேன் என்பதை அவரை பார்க்கச் சொல்லுங்கள் இந்த அறிவிப்பு வெளியிட்ட உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். வைகை செல்வன் முதலில் அருப்புக்கோட்டைக்கு வரட்டும் அருப்புக்கோட்டை பிரச்சனையை பற்றி பேசட்டும். டோக்கன் கொடுத்ததோடு ஓடியவர்தான் திரும்பி வரவே இல்லை. அண்ணாமலையோடு சேர்ந்து அரசியல் செய்ய வேண்டாம் என பேசினார்.