பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை விவகாரம்: தமிழக அரசுக்கு கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை, கீழ்ப்​பாக்கம் அரசு மருத்​துவ​மனை​யில் 50 வயது பெண்​ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்​கப்​பட்ட விவகாரத்தை சுட்​டிக்​காட்டி திமுக அரசுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரி​வித்​துள்ளனர்.

Update: 2025-01-14 14:58 GMT
அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி: சென்னை கீழ்ப்​பாக்கம் அரசு மருத்​துவ​மனை​யில் ஒருவர் புகுந்து உள்நோ​யாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்​ததாக வரும் செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது. மீண்​டும் தலைநகரில், மிக முக்​கியமான அரசு மருத்​துவ​மனை​களுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்​திருப்​பது, திமுக ஆட்சி​யில் பெண்​களுக்​குப் பாது​காப்புஎன்பது துளி​யும் இல்லை என்ற வெட்​கக்​கேடான நிலையை தெளிவாக காட்டி​விட்​டது. பெண்கள் பாது​காப்பு பற்றி சட்டப்​பேர​வை​யில் வசனம் பேசிய முதல்வர் ஸ்டா​லின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார், யார் அந்த சார் என்று கேட்​டாலே எரிச்சல் ஆகும் முதல்வர் ஸ்டா​லின் ஆட்சி​யில் இதுபோன்ற சார்கள் காப்​பாற்​றப்​படு​வ​தால்​தான், மேலும் பல சார்கள் உருவாகிக் கொண்டே இருக்​கிறார்கள். கீழ்ப்​பாக்கம் மருத்​துவமனை பாலியல் வழக்​கில் கைதானவருக்கு உச்சபட்ச சட்டப்​பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதி​செய்ய திமுக அரசை வலியுறுத்து​கிறேன். அமமுக பொதுச்​செய​லாளர் டிடிவி தினகரன்: மாநிலத்​தின் தலைநகரில் நாள்​தோறும் ஆயிரக்​கணக்கான நோயாளி​களும், பொது​மக்​களும் வந்து செல்​லும் பிரதான அரசு மருத்​துவமனை வளாகத்​துக்​குள்​ளாகவே பெண் ஒருவர் பாலியல் தொந்​தர​வுக்கு உள்ளாகி​யிருப்பது தமிழகத்​தில் ஒட்டுமொத்த பெண்​களின் பாது​காப்​பை​யும் கேள்விக்​குறி​யாக்கி​யுள்​ளது. அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவம் ஏற்படுத்திய அதிர்​வலைகள் அடங்​கு​வதற்கு முன்​பாகவே அரசு மருத்​துவ​மனை​யில் நடைபெற்றிருக்​கும் இந்த கொடூரச் சம்பவம் தமிழகத்​தில் எங்குமே பெண்​களுக்கு பாது​காப்​பில்லை என்ப​தையே மீண்​டும் மீண்​டும் வெளிச்சம் போட்டு காட்டு​கிறது. எனவே, பாலியல் தொந்​தரவு அளித்​ததாக கைது செய்​யப்​பட்​டிருக்​கும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்​டும் என அவர்கள் தெரி​வித்​துள்​ளனர்​.

Similar News