சேலம் சன்னியாசி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி பலி
சேலம் சன்னியாசிகுண்டு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன், கூலி தொழிலாளி ஆன இவர் கடந்த 13ம் தேதி இரவு சன்னியாசி கொண்ட பகுதியில் உள்ள ஆத்தூர் மெயின் ரோட்டில் உறவினர் ரஞ்சித் குமார் என்பவரின் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் குமார் லேசான காயங்களுடன் தப்பினர். பின்னால் அமர்ந்திருந்த கோவிந்தனுக்கு தலை உள்பட பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட அந்த பகுதியினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.