தாளவாடியில் திடீரென சாலையில் பற்றி எரிந்த கார்

தாளவாடியில் திடீரென சாலையில் பற்றி எரிந்த கார்;

Update: 2025-01-17 02:52 GMT
தாளவாடியில் திடீரென சாலையில் பற்றி எரிந்த கார் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தர்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளசாமி அவர்களது உறவினர்களுடன் கர்நாடக மாநிலம் அருக்கள்வாடி சென்று விட்டு மீண்டும் தர்மபுரம் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்த போது மெட்டல்வாடி அருகே விவசாயிகள் சாலையில் கொள்ளு செடிகளை போட்டு வைத்திருந்தனர்,இதில் இருந்து கார் சற்று தூரம் சென்றதும் திடீரென காரில் புகை வந்துள்ளது .அனைவரும் காரில் இருந்து இறங்கி உயிர்தப்பினர். அப்போது கார் திடீரென தீ பற்றி கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News