பெண்களுக்கான வண்ண கோலப்போட்டி

பெண்களுக்கான வண்ண கோலப்போட்டி;

Update: 2025-01-17 09:43 GMT
திருச்செங்கோட்டில் பொங்கல் தினத்தை ஒட்டி கலர்ஃபுல் கோலம் போட்டிகள் பொங்கல்திருவிழாவை ஒட்டிதிருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் ரோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் நகரில் பெண்களுக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டது. இரண்டரை மணி நேரத்திற்குள் கோலம் வரைய வேண்டும்.ஒருவர் மட்டுமே கோலம் வரைய வேண்டும்.ஒருவர்கோலப்பொடி கலர் எடுத்துக் கொடுக்கும் உதவிக்கு இருக்கலாம் என பல்வேறு நிபந்தனைகளுடன் கோலப்போட்டி நடத்தப்பட்டது 70-க்கும் மேற்பட்டபெண்கள் கலந்துகொண்டு பல்வேறு வண்ணக் கோலங்களை வரைந்தனர் இதில் மயில்ரங்கோலி கோலம்வரைந்த திருச்சியைச் சேர்ந்த பிரியா என்ற பெண் முதல் பரிசை தட்டிச் சென்றார். இரண்டாவது பரிசை ரம்யா என்பவரும் மூன்றாம் பரிசை கீதா என்பவரும்சிறப்பு பரிசை பூங்கொடி என்பவரும் பெற்றனர். முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசு வாங்கிய திருச்சியைச் சேர்ந்த வெற்றி பெற்ற பிரியா கூறியதாவது என் சொந்த ஊர் திருச்சி உறவினர் வீட்டுக்கு நாமக்கல் வந்திருந்தேன் அங்கு கோலம் போட்டி நடப்பதாக கேள்விப்பட்டு போட்டியில் கலந்து கொள்ள இங்கு வந்தேன் பல்வேறு கோளப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன் இந்தப் போட்டியில் மயில் கோலம் வரைய வேண்டும் என முடிவு செய்தேன் மயில்கழுத்து மயிலின் உருவம் ஆகியவற்றை வித்தியாசமான முறையில் வரைந்தேன் பத்துக்கும் மேற்பட்ட கலர்களை பயன்படுத்தி மயில் கோலம் வரைந்து முதல் பரிசு வெற்றி பெற்று இருக்கிறேன் என தெரிவித்தார்.

Similar News