தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற
சேலம் மாணவிகளுக்கு பாராட்டு
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் தமிழக அணி வீராங்கனைகள் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றனர். இந்த அணியில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவிகள் மோனிகா, சாதனா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். இதையடுத்து தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளை சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ், செயலாளர் சண்முகவேல், நிர்வாகிகள் நந்தன், ஹரிகிருஷ்ணன், பயிற்சியாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாட தேர்வு பெற்ற மாணவி கார்த்திகாவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டன.