கிருஷ்ணகிரி: தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி:தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

Update: 2025-01-18 06:59 GMT
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமியின் 100வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இராமகவுண்டர் கலந்துக் கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.மேலும் வருகின்ற பிப்ரவரி 6-ம் தேதி விவசாயிகளின் பாதுகாவலனாகவும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனருமான ஜயா நாரயணசாமியின் 100-வது பிறந்த நாளினை தமிழகம் முழுவதும் வெகு விமர்ச்சியாக கொண்டப்பட உள்ளது. இந்த விழாவில் விவசாயிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Similar News