ரயில்வே பாலப்பணி: ஜன. 20முதல் போக்குவரத்து மாற்றம்
ரயில்வே பாலப்பணி: ஜன. 20முதல் போக்குவரத்து மாற்றம்
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலபணிகள் தொடங்குவதால் ஜன. 20ஆம்தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசியில் இருந்து ஆலங்குளம் - திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் ஆசாத்நகா் கடையம் ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும். திருநெல்வேலியிலிருந்து வரும் கனரக வாகனங்கள் அத்தியூத்து, சுரண்டை, இலத்தூா் விலக்கு வழியாக தென்காசி (அ) செங்கோட்டை செல்ல வேண்டும். தென்காசி நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் மட்டும் ரயில்வே கடவு வழியே செல்ல வேண்டும். திருநெல்வேலி நோக்கி செல்லும் மற்ற இலகுரக வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் செல்வவிநாயகபுரம் வடக்கு பிரிவு சாலையில் சென்று ரயில்வே சுரங்கப்பாதை வழியாக மேலப்பாவூா் சாலையின் வாயிலாக பிரதான சாலையில் இணைக்கும் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என தென்காசி கோட்ட நெடுஞ்சாலைத் துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.