ஓசூர்:சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் 12 பவுன் நகைகள்,டூவீலர் திருட்டு.

ஓசூர்: சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் 12 பவுன் நகைகள்,டூவீலர் திருட்டு.

Update: 2025-01-18 12:45 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் பாகலூர் சாலை ஹேமகிரி சிட்டி லே அவுட்டை சேர்ந்தவர் அருண் (42) சாப்ட்வேர் என்ஜினீயர் இவர் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று விட்டு மீண்டும் முன்தினம் அவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்தை கண்டு உள்ளே சென்று பார்த்த போது அகிருந்த 12 பவுன் நகைகள், டூவீலர் ஒன்று திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அருண் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News