தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அணிச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம்.

தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அணிசெயலாளர்கள் கலந்த ஆலோசனை கூட்டம் நாமக்கல் மைய மாவட்டத்தின் சார்பாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Update: 2025-01-18 16:17 GMT
தீர்மானங்கள்:-1.எதிர்வரும் ஏப்ரல் -மே -2025 வில் கோவையில் நடைபெறும் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு நாமக்கல் மத்திய மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக தொண்டர்களை அழைத்துச் சென்று மாநாட்டினை வெற்றி பெற செய்வது என இந்த மாவட்ட செயலாளர்கள் மத்தியில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 2.நாமக்கல் பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் வகையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கலந்தாய்வு கூட்டத்தின் வாயிலாக தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது மட்டுமல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்திடும் வகையில் இந்த மாவட்ட கலந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 3.நாமக்கல் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த வழக்குகளை விரைந்து முடித்திட வேண்டி நாமக்கல் மாவட்ட காவல்துறையை இந்த கலந்தாலோசனை கூட்டம் என்பது வலியுறுத்துகிறது.5.நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், தொட்டிபட்டி கிராமம், கோணாம்பரப்பு பகுதியில் வாழக்கூடிய அருந்ததியர் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கின்ற உள்நோக்கத்தோடு
23.12.2024
-ற்குள் காலி செய்ய வேண்டுமென உள்ளாட்சி கிராம நிர்வாக அலுவலர் ஒரு சில நபர்களின் தூண்டலின் அடிப்படையில் செயல்பட்டு ஒவ்வொரு வீடாக சென்று பிரிவு 7- கீழ் நோட்டீஸ் ஒட்டி வீடுகளை அகற்றப் போகிறோம் என்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி பூர்வ குடி மக்களை மிரட்டிய சம்பவம் என்பது வன்மையாக கண்டிக்க கூடியது. எனவே மாவட்ட நிர்வாகமானது முறையாக விசாரணை மேற்கொண்டு பிரிவு 7-ன் கீழ் கொடுக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெற்று அப்பகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் நிர்வாகத்தை தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட கலந்த ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறது.தலைமை:-Dr. த. குமரவேல் மாவட்ட செயலாளர். முன்னிலை:-ரஞ்சித் மாவட்ட துணை செயலாளர்.சிறப்புஅழைப்பாளர்கள்: தோழர். நெய்வேலி முருகன் மாநில துணை பொதுச்செயலாளர். தோழர்.செந்தமிழன் மாநில ஊரக பிரிவு செயலாளர்.கிட்டாட்சி சிவா மேற்கு மண்டல செயலாளர். நன்றி உரை மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள்:- மாதேஷ் தமிழரசன் கவி வள்ளுவன் கோணாம்பரப்பு முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News