மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் நடைபெற்றது மாதாந்திர குற்றக் கூட்டம்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் நடைபெற்றது மாதாந்திர குற்றக் கூட்டம்.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் நடைபெற்றது மாதாந்திர குற்றக் கூட்டத்தில் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவ்வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், வழக்குகளை விரைவில் விசாரணை முடித்து இறுதி அறிக்கையினை உரிய நீதிமன்றத்தில் E'File முலம் தாக்கல் செய்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும் வாகன விபத்தை குறைப்பதற்கு இருசக்கர வாகனத்தில் செல்வோர் அவசியம் தலைகவசம் அணிதல், நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து செல்வதை உறுதி செய்யவேண்டும் எனவும், மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள்.