போடி மெட்டு முதலாம் கொண்டை ஊசி வளைவில் அரசு பேருந்தும் ஜீபும் நேருக்கு நேர் மோதல்

அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாத வண்ணம் பயணிகள் உயிர் தப்பினர்

Update: 2025-01-18 17:30 GMT
போடி மெட்டு மலைச்சாலை முதலாம் கொண்டை ஊசி வளைவில் தேனியில் இருந்து மூணாறு சென்ற தமிழ்நாடு அரசு பேருந்தும் கேரளாவில் இருந்து சென்னை சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த ஜீப்பும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் காலில் காயம் காரணமாக சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போடிமெட்டு மலைச்சாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் கை குழந்தையுடன் பயணிகள் பரிதவிப்பு 150 அடி பள்ளத்தில் தடுப்புச் சுவரில் மோதி பேருந்து நிறுத்தப்பட்டதால் உயிரிழப்பு மற்றும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. மாற்று பேருந்து விடக் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கொட்டும் பணியில் கை குழந்தைகளுடன் நிற்கிறோம் யானைக்காட்டிற்குள் செல்ல வேண்டும் உடனடியாக எங்களுக்கு தனியாக பேருந்து அனுப்பி நாற்பதற்கும் மேற்பட்ட பயணிகளை கேட்டுச் செல்ல தனியாக பேருந்து அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தடுப்புச் சுவற்றில் முட்டி நிற்கும் பேருந்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் அகற்றப்படாமல் உள்ள நிலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது

Similar News