குளித்தலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
உட் கட்டமைப்பு வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம்
கரூர் கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கட்சி உட் கட்டமைப்பு வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் குளித்தலை தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது, இந்த விழாவில் கரூர் மாவட்ட தலைவர் VP.மதியழகன், கரூர் மாவட்ட செயலாளர் ஜி பாலு, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். குளித்தலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் குளித்தலை கிருஷ்ணராயபுரம் தோகைமலை கடவூர், ஆகிய ஒன்றிய நிர்வாகிகளும், குளித்தலை நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கட்சி வளர்ச்சி குறித்தான படிவம் வழங்கப்பட்டது.