பொங்கல் விழா கொண்டாட்டம்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனா வழங்கிய விளையாட்டு குழுவினர்

Update: 2025-01-18 15:49 GMT
பெரம்பலூர் நான்கு ரோடு மேற்கு பகுதி பத்தாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் எம் அருள்ராஜ்தலைமையேற்றார். எஸ் அன்பழகன்,நான்கு ரோடு நடராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டவும் தெரிவித்தனர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விளையாட்டு குழுவினர் சார்பில் பேனா வழங்கப்பட்டது. மற்றும் சென்ற ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.நிகழ்ச்சி தொகுப்பாளர் இரா அண்ணாதுரை மாணவர்கள் இளைஞர்கள் பெரியோர்கள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Similar News