பஞ்சாபில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2,600 டன் கோதுமை நேற்று தஞ்சைக்கு வந்தது. தமிழகத்தில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மத்திய தொகுப்பின் கீழ் அனுப்பி வைக்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மத்திய தொகுப்பின் கீழ் அனுப்பி வைக்கப்படும் அரிசி கோதுமை உள்ளிட்டவை தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக பொது வினியோகத் திட்டத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும். இதன் ஒருபகுதியாக நேற்று காலை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 2,600 டன் கோதுமை தஞ்சை வந்தது. 42 வேகன்களில் வந்த இந்த கோதுமையை அங்கிருந்து லாரிகள் மூலம் தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து திருவாரூர், நாகை, புதுக்கோட்டை அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்பட உள்ளது.