விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில், விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழாவானது மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, நமது விருதுநகரில் விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் உணவு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உணவுத் திருவிழாவில் சுமார் 60 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. உணவுத் திருவிழாவிற்கு அனைவருக்கும் அனுமதி இலவசம். மேலும், உள்ளுர் மற்றும் சர்வதேச உணவுகள், பொழுது போக்கு அம்சமாக பல்வேறு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முதல் நாளான 17.1.2025 இன்று மாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை DJ இசை, விருதுநகர் RRR வழங்கும் நடனம் மற்றும் சிவகாசி குட்டி ஜப்பான் குழுவின் வழங்கும் நடனம் நிகழ்ச்சி, இரவு 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை விஜய் டிவி சூப்பர் சிங்க்ஸ் பிரியா ஜேர்சன், ஆனந்த்; அரவிந்த் மறறும் மதுரை சைமன் குழுவினர் வழங்கும் இசை கச்சேரி உள்ளிட்டவை நடைபெற்றது. உணவுத் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்த பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் பிடித்தமான உணவுகளை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், 18.01.2025 இரண்டாம் நாளான நாளை மாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை DJ இசை, விருதுநகர் RRR வழங்கும் நடனம் மற்றும் சிவகாசி குட்டி ஜப்பான் குழுவின் வழங்கும் நடனம் நிகழ்ச்சி, இரவு 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் ஜீவிதா, ஸ்ரீதர் மற்றும் திருவனந்தபுரம் ML ராஜாவின் கீதாஞ்சலி இன்னிசைக்குழு உள்ளிட்டவை நடைபெற உள்ளது. எனவே, இந்த உணவுத் திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.