இ சேவை மைய உரிமையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது

பயிற்சி முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்

Update: 2025-01-18 12:52 GMT
போடியில் சனிக்கிழமை இ-சேவை மைய உரிமையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. தேனி மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் இ-சேவை மற்றும் பொது சேவை மையங்கள் நடத்தும் உரிமையாளர்களுக்கான பயிற்சி முகாம் போடி தனியார் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில் சங்க செயற்குழு உறுப்பினர் நாகராஜ் மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில்வே அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், சங்கத்தின் மாவட்ட செயலர் முக்தார் மிர்சா கடவுச்சீட்டு விண்ணப்பம் செய்யும் முறைகள் குறித்தும், சங்க உறுப்பினர் செல்வப்பாண்டி புதிய மின் இணைப்பு பெறுதல், மின் இணைப்பு இடமாற்றம், பெயர் மாற்றம் செய்வது குறித்தும், சங்க செயற்குழு உறுப்பினர் யுவா ரமேஷ் தொழிலாளர் நலவாரிய பதிவுகள் குறித்தும், புதுப்பித்தல், உதவித் தொகைகள் பெறுவது குறித்தும் பயிற்சியளித்து விளக்கிக் கூறினர். பல்வேறு ஊர்களிலிருந்தும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தி இ-சேவை மைய உரிமையாளர்களுக்கு பயிற்சிகள் தொடர்ந்து வழங்குவது குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் மாவட்டத்தலைவர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Similar News