தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் வாஜ்பாய் நினைவரங்கத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கடந்த ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய விழாவில் மாணவர்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதைத் தொடர்ந்து, நிறைவுநாளான வெள்ளிக்கிழமை புஷ்பாஞ் சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி விவேகானந்தர் படத்துக்கு தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் இரா.முகுந்தன் மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் பாஜக மூத்த உறுப்பினர் ராதிகா கேசவன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநிலக் கொள்கைப் பரப்பு செயலர் கோபாலகிருஷ்ணன், பெங்களூரு நாம ஸங்கீர்த்தன சபா ராஜகோபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.