மாநிலஅளவில் ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது.
வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2025-ஐ நடைபெறுவதைமுன்னிட்டு,வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 25.01.2025 அன்று மாநிலஅளவில் ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின் படி சிறப்பு சுருக்கத் திருத்தம், 2025-ஐ முன்னிட்டு தேசிய வாக்காளர் தினமான 25.01.2025 அன்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் 25.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாநில அளவில் ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது. இதில் 16 வயதிற்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் கலந்துகொள்ளும் நபர்கள் குழுக்களாகவே மட்டும் கலந்து கொள்ள முடியும். ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்கும் நபர்கள் 23.01.2025 தேதிக்குள் https://virudhunagar.nic.in/nvd-quiz-2025/ என்ற இணைப்பில் பதிவு செய்யவேண்டும். போட்டி நடைபெறும் நாளான்று பதிவு செய்த நபர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையுன் வரவேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்போட்டியில் தமிழ் மற்றும் ஆங்கிலமொழிகளில் கேள்வி கேட்கப்படும். போட்டியானது OMR தாளில் பல சுற்றுகளாகவும், இறுதி சுற்று நேரடி கேள்விகளாக கேட்கப்படும். எனவே 16 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி போட்டியில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.