இறந்து போன காளை மாட்டின் உடலை குப்பையில் வீசியதால் கடும் சுகாதாரக்கேடு*
இறந்து போன காளை மாட்டின் உடலை குப்பையில் வீசியதால் கடும் சுகாதாரக்கேடு*
இறந்து போன காளை மாட்டின் உடலை குப்பையில் வீசியதால் கடும் சுகாதாரக்கேடு அருப்புக்கோட்டை புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலை பகுதியில் திறந்த வெளியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் இறந்து போன காளை மாட்டின் உடலை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளதால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகே செல்லும் சர்வீஸ் சாலை பகுதியில் எஸ்.பி.கே கலைக்கல்லூரி செல்லும் பாதையில் திறந்த வெளியில் இறைச்சி கழிவுகள் பல மாதங்களாக கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதி வழியாக சென்றாலே கடும் துர்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் அதிக அளவு இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இறந்து போன காளை மாட்டின் முழு உடலை மர்ம நபர்கள் அங்கு கொண்டு வந்து வீசி உள்ளனர். குப்பையில் இறந்து போன காளை மாட்டின் உடல் கிடந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில், இதனால் அப்பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.