காரியாபட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் ஒருவர் பலி*

காரியாபட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் ஒருவர் பலி*

Update: 2025-01-18 12:44 GMT
காரியாபட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் ஒருவர் பலி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சி பாரதி நகரில் குடியிருந்து வரும் பூமிலிங்கம் (வயது 34) கல்குறிச்சியில் இருந்து இருந்து தனது சொந்த கிராமமான முஷ்டக்குறிச்சியில் உள்ள தனது குல தெய்வ கோவில் திருவிழாவிற்கு காப்பு கட்ட சென்றுள்ளார். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.கல்லுப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது மீனாட்சிபுரத்தில் இயங்கி வரும் தனியார் மில் ஆலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் ஜீப் காரியாபட்டியில் இருந்து எஸ்.கல்லுப்பட்டி ஊருக்குள் செல்லும்போது XL இருசக்கர வாகனத்தில் மீது மோதியதில் கல்குறிச்சி பாரதி நகரை சேர்ந்த பூமிலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சென்ற காரியாபட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காரியாபட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி மூன்று வருடம் கடந்த நிலையில் கல்குறிச்சியில் குடியிருந்து வந்தார். கோவிலுக்கு காப்பு காப்பு கட்ட செல்லும் போது நடந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News