சர்ச் கார்னரில் டூ வீலர்-கார் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.
சர்ச் கார்னரில் டூ வீலர்-கார் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.
சர்ச் கார்னரில் டூ வீலர்-கார் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம். கரூரை அடுத்த வெங்கக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சுகஜீவன் வயது 27. ராயனூர், பொன்நகர் அருகே ஒத்தையூரைச் சேர்ந்தவர் பெருமாள் வயது 22 . இவர்கள் இருவரும் டூ வீலரில் ஜனவரி 16ஆம் தேதி இரவு 10:15 மணியளவில் கரூர் - வாங்கல் சாலையில் சென்றனர். இவரது வாகனம் சர்ச் கார்னர் அருகே வந்தபோது, எதிர் திசையில், கரூர் தெற்கு காந்திகிராமம் சக்தி நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் வயது 50 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சுகஜீவன் ஓட்டி சென்ற டூவீலர் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் சுகஜீவன் மற்றும் பெருமாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சுகஜீவன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரஞ்சித் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.