தேன்கனிக்கோட்டை: பச்சை மிளகாய் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி.
தேன்கனிக்கோட்டை: பச்சை மிளகாய் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, நொகனூர், நாகமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள் பச்சை மிளகாயை விவசாயிகள் விவசாயம் செய்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் பச்சை மிளகாய் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மேலும் சந்தைகளில் கொள்முதல் விலை ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.