தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு ஆய்வு

கொலைக்கு முக்கிய காரணமாக தலைமை காவலர் ஸ்ரீதர் இருக்கின்றார்.நாங்கள் கைகளத்தூர் கிராமத்தில் ஆய்வு செய்த வரை கை.களத்தூர் காவல் நிலையம் என்றாலே கட்டப்பஞ்சாயத்து காவல் நிலையம் என்று பொதுமக்கள் சொல்கின்ற அளவுக்கு உள்ளது.

Update: 2025-01-18 12:54 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சார்ந்த மணிகண்டன் (30) என்ற தலித் இளைஞரை கை.களத்தூர் கிராமத்தில் வசிக்கும் தேவேந்திரன் (30) என்பவர் மணிகண்டனை காவலர் கண் முன்னே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இச்சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்ட காவல்துறையையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட குழு வன்மையாக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் குழுவினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் தலைமையில் சனிக்கிழமை கை.களத்தூர் கிராமத்திற்கு நேரில் சென்று சம்பவம் குறித்து உறவினர்கள், கிராம மக்கள் ஆகியோரிடம் கொலைக்கான காரணம் குறித்து கேட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் கூறுகையில், கைகளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த படுகொலைக்கு கைகளத்தூர் காவல்துறையினர் எந்த அளவுக்கு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக உள்ளது. காவல்துறையின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணமாக உள்ளது, பாதிப்பிற்குள்ளான மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடைபெற்று இருக்காது, திரைப்படத்தில் நடைபெறுவது போல் இந்த கொலை நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு காவல்துறை இதுபோன்ற சம்பவங்களிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும், குற்றப் பின்னணி இருப்பவர்களோடு காவல்துறையினருக்கு உறவு இருந்து வருகின்றது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக உள்ளது, இதுகுறித்து மாநில அரசு கவலை கொள்ள வேண்டும் மேலும் இதற்கான சரியான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும், இந்த சம்பத்திற்கு ஜாதியும் ஒரு முக்கிய பின்னணியாக இருந்து வருகின்றது. காவல்துறை ஜனநாயக விரோத போக்காக உள்ளது எனவே காவல்துறையை சீரமைக்க வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதி காட்ட வேண்டும், கை.களத்தூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த கொலைக்கு முக்கிய காரணமாக தலைமை காவலர் ஸ்ரீதர் இருக்கின்றார்.நாங்கள் கைகளத்தூர் கிராமத்தில் ஆய்வு செய்த வரை கை.களத்தூர் காவல் நிலையம் என்றாலே கட்டப்பஞ்சாயத்து காவல் நிலையம் என்று பொதுமக்கள் சொல்கின்ற அளவுக்கு உள்ளது. இந்த நிலை மாற்றம் செய்வதற்கு மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலையாளியான தேவேந்திரன் மற்றும் தலைமை காவலர் ஸ்ரீதர் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எஸ்சி .எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறு மாதத்திற்குள் இந்த வழக்கு முடிக்க வேண்டும், உயிரிழந்த மணிகண்டன் குடும்பம் தற்போது சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே மாநில அரசு சட்டப்படி செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் விரைவாக செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்வுகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, முன்னாள் மாநில குழு உறுப்பினர் N. செல்லத்துரை,மாவட்டச் செயலாளர் கோகுலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் கருணாகரன்,கலையரசி, ரெங்கநாதன், , மாவட்ட குழு உறுப்பினர் எழுத்தாளர் எட்வின், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சக்திவேல், கிளைச் செயலாளர் முருகேசன், சி.ஐ.டி.யு.தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News