சைபர் குற்றங்களை தடுக்க செல்போன் செயலி அறிமுகம்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

போலி அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் குற்​றங்களை தடுக்​கும் வகையில் செல்​போன் செயலி மற்றும் 2.7 லட்சம் கிராமங்களை இணைக்​கும் இணையவழி சேவை 2.0 திட்டம் ஆகிய​வற்றை மத்திய தகவல் தொடர்​புத்​துறை அமைச்சர் ஜோதிரா​தித்யா எம்.சிந்தியா தொடங்கி வைத்​தார்.

Update: 2025-01-18 09:15 GMT
மத்திய தகவல் தொடர்​புத்​துறை சார்​பில் தேசிய இணையவழி சேவை 2.0 மற்றும் சைபர் குற்​றங்களை தடுப்​ப​தற்கான ‘சஞ்​சார் சாதி’ செல்​போன் செயலி திட்​டங்களை அமைச்சர் ஜோதிரா​தித்ய சிந்தியா டெல்​லி​யில் நேற்று தொடங்கினார். இத்திட்​டங்கள் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி சென்னை எழும்​பூரில் நேற்று நடைபெற்​றது. இதில் தமிழ்​நாடு உரிமம் சேவை பகுதி (எல்​எஸ்ஏ) கூடுதல் தலைமை இயக்​குநர் சியாம் சுந்தர் சந்தக், துணை தலைமை இயக்​குநர் எம்.சந்​திரசேகர், இயக்​குநர் ஸ்ரீகாந்த் உள்ளிட்​டோர் பங்கேற்​றனர். அப்போது, செய்தி​யாளர்​களிடம் அவர்கள் கூறிய​தாவது, செல்​போன்​களுக்கு வரும் போலி அழைப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலி​யில் பதிவு செய்​வதன்மூலம், அந்த செல்​போன் எண் தொடர்பான அனைத்து புகார்​களும் சம்பந்​தப்​பட்ட ஆபரேட்​டர்​களுக்கு வழங்​கப்​பட்டு உடனடி நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். மேலும் நமது பெயர் மற்றும் ஆவணங்​களைப் பயன்​படுத்தி வேறு யாராவது செல்​போன் எண்ணை பயன்​படுத்தி வந்தால், அதையும் கண்டறிந்து துண்​டித்து​விடலாம் என தெரிவித்தார்.

Similar News