தமிழ்நாடு அரசு நிர்வாகம், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அல்லாள இளைய நாயக்கர் அறக்கட்டளை.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் அமைந்துள்ள அல்லாள இளைய நாயகரின் திருவுருவ சிலைக்கு தை 1ஆம் நாள் அரசு விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழா நடைபெற்றது.
அல்லாள இளைய நாயகர் அரசு விழா நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விழாவிற்கு தலைமை வகித்தார். நகர அமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் உயர்த்திரு.மதுரா செந்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்த்திரு .ராஜேஷ் கண்ணன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் உயர்த்திரு. சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உயர்த்திரு. பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பாளர் தே. ராம்குமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலை வைத்தனர். . சோமசுந்தரம் பட்டக்காரர் அவர்கள் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வு நடைபெற்றது உடன் தென்னிலை பட்டக்காரர் மற்றும் வேட்டுவக்கவுண்டர் சமுதாய பெரியவர்கள், இளைஞர்கள்,மகளீர்கள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் கலந்து கொண்டு மன்னர் அல்லாத இளைய நாயகரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து மன்னர் அல்லாள இளைய நாயகர் வாரிசுதாரர் சோமசுந்தரம் பட்டக்காரர் அவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பொன்னாடை அணிவித்தார்.தொடர்ந்து மொளசி வெள்ளிமணி முத்துமணி, கொங்குதேச மக்கள் மறுமலர்ச்சி கட்சி தலைவர் எம் முனுசாமி கவுண்டர், புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் K.S.ராஜ் கவுண்டர், VG&VKS குழுமம் நிறுவனர் வாழவந்தியார் K.சரவணன், கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் அணி கவுண்டர் ஐயா மருத்துவர் ம.பிரபு, கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் & இளைஞரணி மாநில தலைவர் மதி கவுண்டர், கொங்கர் கலை பண்பாட்டு குழு கி.ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் பேரவை தலைவர் இன்ஜினியர் பழனிச்சாமி, கொங்கு இளைஞர் பேரவை சின்ன கவுண்டர், அரவக்குறிச்சி ரவி, சரவணன்,TEAM KGS, காளி சேனா, திமுக இளைஞரணி துணைச்செயலாளர் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், திருச்செங்கோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி, இறையமங்கலம் சுரேஷ்குமார், கள்ளிப்பட்டி மணி,ஈரோடு வைரமணி மற்றும் நாமக்கல் திமுக பொறுப்பாளர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் இ ஆர் ஈஸ்வரன் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நாமக்கல் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் சேகர்,தரணிதரன் தங்கமணி மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உரிமை மீட்பு குழு ஓபிஎஸ் ஐயா அவர்களின் அணி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ கே நாகராஜன் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம் பழனிச்சாமி அவர்கள், பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மற்றும் பொறுப்பாளர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி முத்துலட்சுமி வீரப்பனார், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள், ராஜவாய்க்கால் பாசன சங்கம், தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் அரையநாடு அல்லாள இளைய நாயகர் அறக்கட்டளையின் சார்பாக சோமசுந்தரம் பட்டக்காரர் தலைமையில் சால்வை அணிவித்தும் அல்லாள இளைய நாயகர் அரசு விழா நினைவு கேடயம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அரையநாடு அல்லாள இளைய நாயகர் அறக்கட்டளையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி நன்றி நன்றி.