திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 7 வங்க தேச இளைஞர்கள் கைது.
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்களாதேசத்தை சேர்ந்த ஏழு பேரை மாநகர போலீசார் கைது செய்தனர்
திருப்பூர் மாவட்டத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி பணியாற்றி வரும் நிலையில் கடந்த 15 நாட்களில் 39 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் திருப்பூரில் வங்கதேச இளைஞர்கள் தங்கி உள்ளார்களா? என போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 13 புலம்பெயர் தொழிலாளர்களை பிடித்த வடக்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கொங்கு மெயின் ரோடு பவானி நகரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது . தொடர்ந்து சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில் தலைமையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர். பிரகாஷ் உள்ளிட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 7 பேர் மட்டும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் மீதம் உள்ள 6 நபர்கள் ஒடிசா,அஸ்ஸாம், மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது . இதனை அடுத்து உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவி தங்கி இருந்த இம்ரான் ஹுசைன், நூர் நபி, ராபினி மோண்டல், ஷாஜகான், மோக்தர், ரபிகுல் இஸ்லாம், கபீர் ஹூசைன் என்ற 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.