கோவை: எம்.ஜி.ஆர் பிறந்தநாள்- பொங்கல் வைத்து கொண்டாட்டம் !
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா, கோவை சூலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா, கோவை சூலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, அதிமுக மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனது உரையில், அவர் எம்.ஜி.ஆர் மற்றும் அதிமுகவின் பங்களிப்பை எடுத்துரைத்து, திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கு உறுதி ஏற்றனர்.