வடகரை மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது
மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள வடகரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று மாலையில் 'இந்திய விடுதலையும் இன்றைய நிலையும்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி கிளைத் தலைவர் ஜாபர் அலி தலைமை வகித்தார். மைதீன் பாரூக் வரவேற்றனர். மாநில துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட் கான், மாவட்ட தலைவர் முகம்மது யாகூப் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிடாவெட்டி இஸ்மாயில், முகம்மது இல்யாஸ் அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஏராளமான மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.