சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி பெண் பலி!

கோவில்பட்டியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2025-01-18 05:04 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வஉசி நகர் முதல் தெருவைச் சேர்ந்த முருகேசன் மனைவி ஜோதிலட்சுமி (50). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார். இவரும், பொன்வேல்சாமி மனைவி கமலபுஷ்பம் என்பவரும் நேற்று மந்தித்தோப்பு சாலையில் உள்ள லயன்ஸ் கிளப் அருகே மினி பஸ்சிலிருந்து இறங்கி சாலையைக் கடக்க முயன்றனராம். அப்போது, ஜோதிலட்சுமி மீது பைக் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டிவந்த கணேஷ் நகரைச் சேர்ந்த அந்தோணி மகன் செல்வம் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Similar News