இருசக்கர வாகனம் திருடிய நபர்கள் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் ஈடுபட்ட இருவர் கைது, வாகனம் மீட்பு

Update: 2025-01-18 07:51 GMT
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் கடந்த 11ம்தேதி மதியம், தனது வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காதால், பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த காவலர்கள், இரு சக்கர வாகனத்தை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை பாப்பிரெட்டிப்பட்டி பேருந்துநிலையம் அருகே சுற்றித்திரிந்த இருவரை சந்தேகத்தின் பேரில், காவலர்கள் பிடித்து விசாரித்ததில், கலையரசனின் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர். விசாரணையில் அவர்கள் தர்மபுரி அருகே உள்ள மூக்கனூர் பகுதியை சேர்ந்த ஆதிமூலம், ஹரிதாஸ் என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்த காவலர்கள், அவர்களிடம் இருந்த கலையரசனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News