கோவை: சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியை பழகி, அவளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியை பழகி, அவளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி, அம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்த சந்தானம், கோவை சூலூரில் உள்ள ஒரு உணவகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 15ஆம் தேதி, இவர் இன்ஸ்டாகிராமில் பழகிய 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், சந்தானத்தை நேற்று கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.