ஜீவா நினைவு நாள்;  திருவுருவ சிலைக்கு கலெக்டர்  மரியாதை

நாகர்கோவில்

Update: 2025-01-18 06:33 GMT
பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் என்ற ஜீவா 62-வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின்கீழ், நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள ஜீவா நினைவு மண்டபத்திலுள்ள, அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று (18.01.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் :-       பொதுவுடமை வீரர் ப.ஜீவா சுதந்திரப்போராட்ட தியாகத்தால் குமரிக்கு தனிப்பெருமை சேர்த்தவர் எனும் புகழுக்குரியவர். அவரது நினைவு நாளையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. என கூறினார்.         இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்லெட் சுஷ்மா,  உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News