கரூரில்,மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
கரூரில்,மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
கரூரில்,மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்க அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டு போட்டி நிர்வாக இயக்குனர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக நல அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கம் இணைந்து நடத்திய இந்த பொங்கல் விழாவில், அலுவலகம் முன்பு பொங்கல் பானை வைத்து பொங்கல் வைத்த பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரிய அளவிலான பலூன் ஊதுதல், மியூசிக் பால், மாற்றுத்திறனாளிக்கான டூவீலரை மெதுவாக இயக்குவது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கந்தசாமி. இந்த நிகழ்ச்சியில் நிர்வாக பொருளாளர் தமிழரசி, நிர்வாக மேலாளர் தமிழ்ச்செல்வி, அனைத்துக் கட்சி உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அன்னபூரணம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், திருச்சி பாய்லர் ஓய்வு பணியாளர் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.