முன்னாள் பேரூராட்சி தலைவர் நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகளை அடக்க முயன்ற 4 போ் காயமடைந்தனா்.;
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் பேரூராட்சி முன்னாள் தலைவா் நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 17 காளைகளும், 153 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தின் நடுவே கயிற்றால் கட்டி வைக்கப்பட்ட காளையை 25 நிமிடங்களில் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டது. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 4 போ் காயமடைந்தனா். போட்டியை சிவகங்கை, சாத்தனி, பொன்னாம்பட்டி, கருதுபட்டி, கௌரிப்பட்டி, முத்தூா், வாணியங்குடி, சூரக்குளம் கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கண்டுகளித்தனா்.