இளம் பெண் தீக்குளித்து தற்கொலை.

மதுரை பெருங்குடி அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-01-20 06:55 GMT
மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள வலையப்பட்டியில் வசிக்கும் போஸ் என்பவரின் மகள் ஒய்யம்மாள்( 25 ) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 16ஆம் தேதி காலை 7 மணிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டார். 80 சதவீதம் தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று (ஜன.20) காலை உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் அழகுநாச்சி பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News