சாலை மறியலில் ஈடுபட்ட காய்கறி கடைக்காரர்கள்.

மதுரை தெற்கு வாசல் பகுதியில் காய்கறி கடைக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2025-01-21 08:58 GMT
மதுரை தெற்கு வாசல் சந்திப்பு பகுதியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ளே சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகள் மாத வாடகைக்கு உள்ளன. இந்த கடைகளில் முறையான வாடகை செலுத்தாத கடைகளை சீல் வைக்க முன்னறிவிப்பு இல்லாமல் இன்று (ஜன.21) மதியம் மாநகராட்சி அதிகாரிகள் வந்தார்கள் .இந்த கடைகளுடன் சேர்த்து அப்பகுதியில் உள்ள தினசரி காய்கறி கடைகள் மற்றும் பூக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று கூறியதால் கடைக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தகவல் அறிந்து வந்த தெற்கு வாசல் காவல்துறையினர் மாநகராட்சி மற்றும் காய்கறி கடைக்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து பேசி முடிவெடுப்போம் அதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News