முன்னாள் அமைச்சர் நத்தம்விசுவநாதன் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் அவர் பேசும்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்ததாகவும் தற்போதுள்ள திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மது கலாச்சாரம், வன்முறை கலாச்சாரம், பாலியல் வன்முறைகள் என தமிழகத்தில் நாள்தோறும் சட்ட ஒழுங்கு சீரழிந்து வருவதாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி அவர் பேசினார். இதனிடைய வேறொரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தொடக்கத்திலேயே தனது உரையை நிகழ்த்தி விட்டு விடை பெற்றார் அப்போது மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் அனைவரும் மேடையை விட்டு இறங்கி அவரை வழி அனுப்பி சென்றதால் மேடை காலியானது இதனால் கூட்டம் முடிந்து விட்டது என பல தொண்டர்கள் கலைந்து சென்றதால் கூட்டத்தில் இருக்கைகள் காலியானது இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி மற்றும் பேச்சாளர்கள் சிறப்புரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தனர்.