ஆரணி விசிக பிரமுகர் கைது சம்பவத்தில் சதி. மக்கள் கண்காணிப்பக குழுவினர் தகவல்.
ஆரணியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ம.கு.பாஸ்கரனை தேசூர் பகுதி வழக்கு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் வேண்டுமென்றே காவல் துறையினர் சதி செய்து கைது செய்யப்பட்டார் என்று ஆரணி செய்தியாளர்களிடம் மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் கூறினார்.
ஆரணியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ம.கு.பாஸ்கரனை தேசூர் பகுதி வழக்கு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் வேண்டுமென்றே காவல் துறையினர் சதி செய்து கைது செய்யப்பட்டார் என்று ஆரணி செய்தியாளர்களிடம் மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன்(52) கடந்த 17ம் தேதி வந்தவாசி தாலுக்கா தென்னாத்தூர் கிராமத்தில் முருகன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு இடையே நிலதகராறில் கிருஷ்ணன் என்பவரின் தரப்பிற்கு ஆரணியை சேர்ந்த விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆதரவாக சென்று முருகன் நிலத்தை சேதப்படுத்தியதாகவும், மோட்டர் பம்பு அடித்து உள்ளிட்ட பொருட்களை நொறுக்கியதாகவும் தேசூர் காவல்நிலையத்தில் பாதிக்கபட்ட முருகன் என்பவர் புகாரின் பேரில் ம.கு.பாஸ்கரன், கிருஷ்ணன், வினோத், பிரியா உள்ளிட்ட 5பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வந்தவாசி டி.எஸ்.பி கங்காதரன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாஸ்கரன் வீட்டின் முன்பு 2 தினங்களுக்கு முன்பு குவிக்கபட்டு சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வட்டாச்சியர் கௌரி ஆகியோர் முன்னிலையில் விசிக பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது சம்பவத்தில் உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும் பொய் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் கூறி மதுரை தலையிடமாக கொண்ட மக்கள் கண்காணிப்பகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் தலைமையிலான குழு தேசூர் காவல்நிலையம் மற்றும் வந்தவாசி டி.எஸ்.பி கங்காதரன் ஆகியோரிடம் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது சம்பவத்தில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளன. நிலம் சம்மந்த விவகாரத்தில் புகார் அளிக்கபட்டவருக்கு நிலம் சொந்தமில்லை எனவும் களஆய்வில் தெரிய வந்தன. மேலும் அதிக போலீசார் குவிக்கபட்டு விசிக பிரமுகர் கைது செய்த பின்புலத்தில் உள்ள அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.