விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம்
38 பேர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தேசிய ஊனமுற்றோர் உரிமைகளுக்கான மேடை சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறி 38 மாற்றுத் திறனாளிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.