மூடியிருந்த ரயில்வே கேட் வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் அடிபட்டு சாவு

விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை

Update: 2025-01-21 18:15 GMT
செந்துறை ரயில் நிலையத்திற்கும் - வெள்ளூர் ரயில் நிலையத்திற்கும் இடையே வெள்ளூர் ரயில் நிலையம் அருகே காலை 7 மணிக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயில்வே கேட் மூடியிருந்த போது தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீன் வரை செல்லும் சம்பர் காந்தி எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடித் துடித்து இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் பிரேதத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்தவர் அரியலூர் மாவட்டம் பொட்டவெளி கிராமம் நடுத்தெரு பாலகிருஷ்ணன் மகன் சரவணன் (வயது 40) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கடந்த ஏழு வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படும் நிலையில் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. இது குறித்து சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News