ஊ.மங்கலம் மேலப்பாளையூர் பகுதியில் 23ஆம் தேதி மின் வினியோகம் நிறுத்தம்
மின்சார வாரிய செயற்பொறியாளர் தகவல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஜன. 23ந் தேதி அன்று வியாழக் கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இத்துணை மின் நிலை யத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கங்கைகொண்டான், ஊ. அகரம், ஊ. கொளப்பாக்கம், கொள்ளிருப்பு, இருப்புக்குறிச்சி, ஊத்தங்கால், ஊ.மங்கலம், சமுட்டிகுப்பம், அம்மேரி, அரசகுழி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், அம்பேத்கார் நகர், வி. குமாரமங்கலம், கோபாலபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினி யோகம் நிறுத்தப்படும். இதே போல மேலப்பாலையூர் துணைமின் நிலையத்தில் ஜனவரி 23ந் தேதி வியாழன் அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 09.00 மணி முதல் மாலை.4.00 மணி வரை இத்துணைமின் நிலை யத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மேலப்பாலையூர், ஏ.வல்லியம், சி.கீரனூர், மருங்கூர், க.தொழுர், காவனூர், தே.பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபுரம், சு.கீணனூர், கொடுமனூர் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு விருத்தாசலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.