மார்த்தாண்டத்தில்  மனைவி கண்முன்  கணவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி

Update: 2025-01-21 12:58 GMT
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி காவுவிளை பகுதியை சேர்ந்தவர் டென்னிசன் (66). இவரது மனைவி சுதா (48). டென்னிசனுக்கு அடிக்கடி உடல் நல கோளாறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை டென்னிசன் மற்றும் சுதா ஆகியோர் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டென்னிசன் சுருண்டு விழுந்து மயங்கினார்.        இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுதா உடனே அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் டென்னிசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தனது கண் முன்னே கணவர் சுருண்டு விழுந்து இறந்ததால் சுதா கதறி அழுதார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News