நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில், சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கோரிக்கையை ஏற்று, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ.செங்குட்டுவன் நேற்று திறந்து வைத்து, நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.