தடை செய்யப்பட்ட நெகிழி பாட்டில்கள் அரசு மைதானத்தில்
கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட நெகிழி பாட்டல்களை அரசு மைதானத்தில் பயன்படுத்தி வரும் தனியார் பெயிண்ட் நிறுவனம் கண்டுகொள்ளாத கொடைக்கானல் நகராட்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மையப்பகுதியில் அமைந்துள்ள மூஞ்சிக்கல் அரசு விளையாட்டு மைதானத்தில் ஏசியன் பெயிண்ட் ஊழியர்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வருகின்றனர் இந்த மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விழா நடத்தும் வேண்டுமென்றால் அரசு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்போது கொடைக்கானல் அரசு மைதானத்தில் தனியார் ஏசியன் பெயிண்ட் ஊழியர்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினர் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறும் பகுதியில் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட நெகிழி பாட்டல்களை பயன்படுத்தி வருகிறார்கள் மேலும் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட நெகிழி பாட்டிலில் சோதனை சாவடிகள் பல இடங்களில் இருந்தும் எவ்வாறு கொடைக்கானல் மையப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது என்பது கொடைக்கானல் மற்றும் சமூக ஆர்வலரையும் சந்தேகம் எழும்பியுள்ளது மேலும் சுற்றுலாப் பயணிகளை மட்டும் சோதனை செய்து அவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் நிலையில் தனியார் நிறுவனம் எவ்வாறு சோதனை சாவடிகள் அனைத்தையும் தாண்டி தற்போது கொடைக்கானல் மையப்பகுதி அரசு மைதானம் விளையாட்டுப் போட்டியில் நெகிழி பாட்டல்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் மேலும் கொடைக்கானல் நகராட்சி இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது பொதுமக்களிடையும் சமூக ஆர்வலர்களிடமும் கேள்வியாக இருந்துள்ளது.